தனிமையின் இனிமை
உடல் அளவில் தனிமை ஒரு கொடுமை
உள்ள்த்தளவில் தனிமை ஒரு பேரின்ப இனிமை
பேராசை வழிகாட்டும் பொறாமை
போதும் என்பது மனம்நிறைந்த பொறுமை
ஓசைகள் எதுவும் இல்லாத அமைதி
இச்சைகள் தவிர்த்த நிம்மதி
இயற்கையின் இடி ,மின்னல் ,மழை கீதம்
வசியபடுத்தும் காக்கை ,குயில் ,குருவி நாதம்
உணர்ந்து சுவாசிக்கும் தென்றலில் மன குளிர்ச்சி
தூய்மையான காற்றின் புத்துணர்ச்சி
பறந்தோடிவிடும் மன தளர்ச்சி
மனம், உடல் ,மென்மையான உணர்ச்சி
நம்மை நாமே புரிந்துகொள்ளும் வலிமை
பிறர் உணர்வுகளை மதிக்கும் எளிமை
இனிமை தனிமைல்தான்
தனிமைதான் இனிமை
நிலையான இனிமை வேறொன்று உளதோ !!