living bridge

Monday, 12 January 2015

THANIMAIN INIMAI


                    
                                தனிமையின்  இனிமை

               உடல் அளவில் தனிமை ஒரு கொடுமை

               உள்ள்த்தளவில்  தனிமை  ஒரு  பேரின்ப  இனிமை

              பேராசை  வழிகாட்டும்  பொறாமை

              போதும் என்பது மனம்நிறைந்த  பொறுமை



              ஓசைகள்  எதுவும்  இல்லாத  அமைதி

              இச்சைகள்  தவிர்த்த  நிம்மதி

              இயற்கையின்  இடி ,மின்னல் ,மழை  கீதம்

              வசியபடுத்தும்  காக்கை ,குயில் ,குருவி  நாதம்



              உணர்ந்து  சுவாசிக்கும்  தென்றலில்  மன குளிர்ச்சி

             தூய்மையான  காற்றின்  புத்துணர்ச்சி

             பறந்தோடிவிடும்  மன  தளர்ச்சி

            மனம்,  உடல் ,மென்மையான  உணர்ச்சி



            நம்மை  நாமே புரிந்துகொள்ளும்  வலிமை

           பிறர்  உணர்வுகளை  மதிக்கும்  எளிமை

           இனிமை  தனிமைல்தான்

           தனிமைதான்  இனிமை


 நிலையான  இனிமை   வேறொன்று  உளதோ  !!